பாலர் ஞாயிறிது பாசமாய் வாரும்
73. பாலர் ஞாயிறு கீதம்
குழந்தைகள் வாயினாலும், பாலகர் வாயினாலும்
துதி உண்டாகும்படி செய்தீர்' (சங். 8:2)
இராகம் - தேவ சேயின் பால்ய சேனையார்
நாமே
பல்லவி
பாலர் ஞாயிறிது பாசமாய் வாரும்
பாடி ஏசு
நாமம் பணிந்து போற்றும்
அனுபல்லவி
தாலந்தைப் புதைத்திடாமல்
தாமதமே பண்ணிடாமல்
ஞாலமீதிறங்கிவந்த
சுவாமியேசு
அன்பை எண்ணிப் - பாலர்
1. பாலர் சங்கத்தாலே
மாட்சிமை பெற்றோம்
பாலர் நேசர் பாதம் பணியக் கற்றோம்
பாரில் ஜோதி வீசுகின்ற
பரிசுத்த வேதம் கற்றோம்
ஊரிலெங்கும்
கார்ட் பஞ்சாங்கம் ஓதும்
பாலியர்
நேசன் கண்டோம் - பாலர்
2. தேடி வந்தலையும்
தேசிகருண்டு
பாடி ஆர்ப்பரிக்கப்
பாலர் பாட்டுண்டு.
கூடி வந்து ஆனந்திக்க
கூட்டப்பண்டிகையுமுண்டு
நாடி மீட்பர் பாதம் பாலர்
தேட எல்லா ஏதுமுண்டு - பாலர்
3. இன்று மட்டும் நம்மை ஏந்தி வந்தாரே
இன்னும் நித்தியமும்
பாதுகாப்பாரே
அன்பின் சங்கம் இதைக் கொண்டு
ஆத்ம நேசர் செய்துவரும்
எண்ணி முடியா நன்மையை
ஏகமாக
எண்ணிக் கொண்டு - பாலர்
4. பெற்ற தாய்மாரே நீர் உற்றுக்
கேளீரோ?
சற்று எங்கள் சங்கம் நோக்கிப் பாரீரோ?
உங்கள் மேலுள்ள பொறுப்பைத்
தங்கள் மேலே தாங்கி வரும்
எங்கள் அன்பின் சங்கம் என்றும்
ஏகன்
அன்பால் செழித்தோங்க - பாலர்
5. குட்டி பேணிடாத
கோனார் தானுண்டோ?
நட்டி வருமென்று
நன்குணராரோ?
பட்சமுள்ள
மேய்ப்பர்களே
இஷ்டரான
மெம்பர்களே
ரட்சகரின்
கட்டளையை
இஷணமே
நீர் மதித்து - பாலர்
6. எத்தனையோ திரள் எந்தன் தேசத்தில்
நித்தம் சாடுகிறார்
நித்திய நரகில்
ரத்தம் சிந்தி மீட்ட நேசர்
சத்தமிட்டுக்
கெஞ்சுகிறார்,
நித்திரை
விட்டெழும்பாயோ?
நித்தியத்தை
நீ நினைத்து - பாலர்
7. வேண்டும் நன்மை செய்யும் மேன்மை சங்கத்தை
தூண்டும் உந்தன் ஜெப தூபமதினால்,
மீண்டும் மிக்க ஆசையுடன்
மின்னும் வெள்ளி பொன் எடுத்து,
ஆண்டவரின் பாதம் வந்து
அன்பதாய்ப்
படைப்பீராக - பாலர்
Comments
Post a Comment