குறித்த காலத்திற்கு என்னில்

குறித்த காலத்திற்கு என்னில்

மேலும் அதிக பாடல்களுக்கு

 

 

 

 

 

 

          குறித்த காலத்திற்கு என்னில்

            தரிசனம் வைத்தவரே - 2

            அது முடிவிலே விளங்கும்

            பொய் சொல்லாது

            அதில் தாமதம் இல்லை என்றீர் - 2

 

                        துதிப்போம் இயேசுவை துதிப்போம்

                        நம்மில் தரிசனம் வைத்தார் துதிப்போம்

                        துவங்கின இயேசுவை துதிப்போம்

                        அதை நிறைவேற்றி முடிப்பார் துதிப்போம் - 2

 

1.         என்னுடன் வந்தோர் பிரிந்து சென்றும்

            தொடர்ந்து சுமந்தீரே

            ஏறிட்டு பார் என்று தேசங்கள்

            அனைத்தையும்

            என் கையில் கொடுத்தீரே

 

            என்னுடன் வந்தோர் பிரிந்து சென்றும்

            தொடர்ந்து சுமந்தீரே

            மேலான இலக்கை எதிர் நோக்கி

            ஓட புது பெலன் தந்தீரே - துதிப்போம்

 

2.         முடியாது என்று ஓடி ஒளிந்தும்

            தேடி வந்தீரே

            போகின்ற தூரம் வெகுதூரம் என்று

            புறப்பட செய்தீரே - துதிப்போம்

 

3.         அந்நியனாக கால் வைத்த இடத்தை

            கரங்களில் கொடுத்தீரே

            தேவைகள் எல்லாம் அற்புதமாக

            சந்தித்து நடத்தினீரே - துதிப்போம்

 

 

- Ps. John Jebaraj

 

 

YouTube Link
YouTube Link

 

 

 

 

 

 

கிறிஸ்தவ பாடல் தொகுப்பு

 

PDF பாடல் புத்தகங்கள் பதிவிறக்கம்

 

Comments

Popular posts from this blog

உன்னதரே உம் மறைவில் தங்கி வாழ்கிறேன்

என் வாழ்விலே நீர் பாராட்டின

தாய் மறந்தாலும் நீர் மறப்பதில்லையே