பாரச்சிலுவையிலே பரன்
பாரச்
சிலுவையிலே பரன்
இயேசு உயிர் கொடுத்தார்
பாசம் நிறைந்தவராய் அவர்
உன்னைத் தான் கேட்கின்றார்
1. வியாதியினால் வந்த வேதனையோ
தோல்வியினால் வந்த துயரங்களோ
எந்த நிலையில் நீ இருந்தாலும்
சொந்த மகனாக மாற்றிடுவார்
2. காயங்கள் உனக்காய் அடைந்தவரே
கண்ணீர் உனக்காய் வடித்தவரே
கல்வாரியில் உயிர் கொடுத்தவரே
கரம் நீட்டி அழைக்கின்றார் ஓடி வா
3. சொந்த மகனென்று பாராமல்
அவரையே உனக்காய் கொடுத்திட்டவர்
எதை உனக்கு இன்று தர மாட்டார்
நம்பி வந்திடு ஓ மனிதா
Comments
Post a Comment