நிதமும் பாடி போற்றுவோம்
நிதமும் பாடி போற்றுவோம்
இதயம் பொங்கிப் பூரிப்பாய்
நம் தேவனை
1. விண்ணவன் நம்மோடிருந்தாரே - இரு
கண்ணின் மணிபோல் காத்தாரே
எண்ணில்லா நன்மைகள் பல ஈந்தாரே
பண்போடு பணிந்திடுவோம் - நிதமும்
2. வந்தார் பூவில் நம்மை மீட்க தம்மை
தந்தார் பலியாய் குருசினில்
ஈந்தார் சுத்த ஆவிதனை
சிந்தித்துப் பணிந்திடுவோம் - நிதமும்
3. அந்த காரத்தில்
ஆழ்ந்திருந்தோம் - தம்
விந்தையான ஒளி காட்டினார்
சொந்த ஜனமாகத் தெரிந்தெடுத்தாரே
சந்ததம் பணிந்திடுவோம் - நிதமும்
4. வாழ்வினிலே பல வீழ்ச்சியுற்றோம் -நாம்
ஆழ்ந்திடாமல் கை தூக்கினார்
சூழ்ந்திடும் சோதனை யாவும் ஜெயித்திட
தாழ்ந்துமே பணிந்திடுவோம் - நிதமும்
5. சத்துரு செய்த சதி மோசம் அவை
அத்தனையும் தூரப் போக்கினார்
சுத்தர்களாய் நாம் சோபித்திலங்கிட
நித்தமும் பணிந்திடுவோம் - நிதமும்
6. தொனித்திடுதே சத்தம் தேசமெங்கும் இயேசு
சபைதனை சேர்க்க
வாறாரே
புனித ராகவே
பூவினில் நிற்க
கனிவுடன் பணிந்திடுவோம் - நிதமும்
Comments
Post a Comment