இயேசு பிறந்தார் வாழ்வு மலர
இயேசு பிறந்தார் வாழ்வு மலர
விந்தை தேவன் பிறந்தார்
மாளும் மாந்தரை மீட்க - 2
1. மந்தை ஆயர்கள் போற்ற
விந்தை மைந்தனை வாழ்த்த - 2
ஆர்ப்பரிப்போம் அகமகிழ்வோம்
தேவனின் நெஞ்சம் மகிழ - 2 - இயேசு பிறந்தார்
2. தாவீதின் வேராய் பிறந்தார்
தரணியில் மானிடர்க்காய் மரித்தார் - 2
உயிர்த்தெழுந்தார் பரம் சென்றார்
தேற்றரவாளன் வந்தார் - 2 - இயேசு பிறந்தார்
Comments
Post a Comment