பாரதம் நமது பாரதம்
பாரதம்
நமது பாரதம்
இயேசுவுக்கே சொந்தம்
1. தேசம் அழிந்து போகுதே
ஜனங்கள் நரகம் செல்கிறார்
இயேசுவுக்காய் யுத்தம் செய்யவே
எழுந்திடு வாலிபனே - 2 - பாரதம்
2. வறண்ட நிலங்களுண்டு
வருகை சமீபமாகுதே
வாழ்வு தரும் இயேசுவுக்காக
உன் வாழ்வை தியாகம் செய்ய வா - 2 - பாரதம்
3. சிலுவைக் கொடி பறக்குதே
இயேசுவுக்காய் கோடி கோடிகள்
தேசம் எங்கும் எழும்பிடவே
நேசருக்காய் இன்றே ஓடி வா - 2 - பாரதம்
Comments
Post a Comment