இம்மானுவேலின் இரத்த ஊற்றதோ
இம்மானுவேலின் இரத்த ஊற்றதோ
எப்பாவம் போக்கும் ஜீவ ஊற்றதோ
அல்லேலூயா பார் அதோ கல்வாரியிலே
அதோ
ஐந்தாறு கூடி ஓடுது
அன்பின் இன்ப வெள்ளம் பெருகுது
- (2)
1. பாவியான கள்ளனும் அவ்வூற்றில் மூழ்கினான்
பாவ மன்னிப்பானந்தம் கண்டு பூரித்தான்
- இம்மானுவேலின்
2. பாவி என்னில் கொண்ட தேவ அன்பின் அகலமே
நீளம் ஆழம் உயரம் இன்னும் வளர்ந்து செல்லவே
- இம்மானுவேலின்
3. ஆவியால் நிறைத்து தேவ சாயலாக்கினார்
தூய இரத்தத்தால் கழுவி சுத்தமாக்கினார்
- இம்மானுவேலின்
4. பிசாசு உலகம் மாம்சம் மூன்றும் ஜெயித்த இரத்தமே
பின்னடையா சிலுவை கொடி உயர்த்துவோம் நாமே
- இம்மானுவேலின்
5. ஈட்டியால் குத்தப்பட்ட இயேசு இரத்தமே
தீட்டுப்பட்ட குஷ்ட ரோகம் தீர்க்கும் இரத்தமே
- இம்மானுவேலின்
- வயலட் ஆரோன்
YouTube Link
Comments
Post a Comment