பாவ மன்னிப்பின் நிச்சயத்தை
பாவ மன்னிப்பின் நிச்சயத்தை
பெற்றுக்
கொள்ள வேண்டும்
பரலோகத்தில்
ஓர் இடம் நீ பெற வேண்டும் - 2
இயேசு
தருகிறார் இன்று தருகிறார்
அதற்காகத்
தான் சிலுவையிலே
இரத்தம்
சிந்தி விட்டார் - 2 - பாவ
1. முதன்
முதலாய் தேவனுக்கு உகந்ததைத் தேடு - 2
பின்பு
எல்லாமே உனக்கு சேர்த்துத் தந்திடுவார் - 2 - பாவ
2. நீ
தேடும் நிம்மதி இயேசு தருகிறார் - 2
நீ
நாடும் விடுதலை அவரிடம் உண்டு - 2 - பாவ
3. வருத்தப்பட்டு
பாரங்கள் சுமக்கின்ற மகனே (ளே) - 2
வருவாயா
இயேசு இன்று வாழ்வு தந்திடுவார் - நீ - 2 - பாவ
4. இரத்தம்
சிந்துதல் இல்லாமல் பாவ மன்னிப்பில்லை - 2
இயேசுராஜா
நாமம் இல்லாமல் இரட்சிப்பும் இல்லை - 2 - பாவ
- பெர்க்மான்ஸ்
Comments
Post a Comment