ஜெபம் பண்ணுங்கள் விழித்திருங்கள்
ஜெபம் பண்ணுங்கள்
விழித்திருங்கள்
நேசர் வருகை அதி சீக்கிரம்
சமீபமாய் இருக்கின்றது - 2
மணவாளனே வாரும் வாருமே
மணவாட்டி நான் காத்திருக்கிறேன்
- 2
ஜெபம் பண்ணுங்கள்...
1. உங்க வருகை இரகசியமாய்
நினையாத நாளில் உள்ளது - 2
உங்க முகத்தை நான் காணணும் - 2
உம் தோளிலே அமர்ந்திடனும் - 2 - மணவாளனே
2. மணவாளனே உம்மைக் கண்டு
மறுரூபமாகணுமே - 2
மணவாட்டி நான் தீபம் கொண்டு - 2
உம்மைத்தானே பின் செல்லனும் - 2 - மணவாளனே
3. வயல் நிலங்களை பார்க்க வருகின்றார்
கோதுமைதனை அறுவடை செய்வார் - 2
தூற்றுக் கூடையோ அவர் கையிலே - 2
கோதுமையை சேர்த்துக்கொள்வார் - 2 - மணவாளனே
- Pas. Kamalanathan
Comments
Post a Comment