கர்த்தாவே நீர் பேசும்
கர்த்தாவே
நீர் பேசும்
அடியேன்
கேட்டு மகிழ்ந்திடவே
உம்
சத்தம் கேட்க ஆவலாய் வந்தேன்
என்னோடு
பேசிடுவீர்
1. இயேசுவின் நாமத்தில் எதை கேட்டாலும்
தருவேன் என்று வாக்குரைத்தவரே
உம் திருநாமம்
மகிமைப்படவே
என்னில் நீர் கிரியை செய்வீர் - கர்
2. புது எண்ணெயால் அபிஷேகிப்பீர்
புது பெலத்தால் என்னை நிரப்பிடுவீர்
எந்தனின் பாத்திரம் நிரம்பிட செய்யும்
நதியாக பாய்ந்திடட்டும்
- கர்த்தாவே
3. ஆலயத்தின் பரிபூரணத்தால்
திருப்தி அடைய செய்திடுவீர்
ஜீவ ஊற்றண்டை
வழி நடத்துவீர்
தாகத்தை தீர்த்திடுவீர்
- கர்த்தாவே
4. நடக்கும் வழி காட்டிடுவீர்
நீர் என்னை போதித்து நடத்திடுவீர்
கண்கள் பதித்து ஆலோசனை தந்து
நிதமும் காத்திடுவீர்
- கர்த்தாவே
5. என்னை விட்டென்றும்
எடுபடாத
நல்ல பங்கடைய
தந்தேன் என்னை
உம் சித்தம் செய்து என்றும் ஜீவிக்க
கிருபையால் நிரப்பி விடும் - கர்த்தாவே
6. நினைப்பதிலும் கேட்பதிலும்
அதிகமாய் கிரியை செய்திடுவீர்
வருகை நாள் மட்டும் உம்மில் மகிழ
என்னோடென்றும்
இருப்பீர்
Comments
Post a Comment