கனிவின் கரங்கள் தினம் வழிநடத்தும்

கனிவின் கரங்கள் தினம் வழிநடத்தும்

மேலும் அதிக பாடல்களுக்கு

 

 

 

 

 

 

                    கனிவின் கரங்கள் தினம் வழிநடத்தும்

                        நம் ஜீவிய காலமட்டும் - 2

                        பயம் வேண்டாம் இனி

                        புவி யாத்ரை கடந்திடுவோம் - 2

 

1.         பகலில் மேக ஸ்தம்பமாய்

            இராத்திரியில் அக்கினி தூண்களாய் - 2

            தாக ஜனத்திற்காய் பிளந்தார் பாறையும்

            ஜீவ மன்னா தந்தது யார் - 2

            அந்த யெகோவாவை வாழ்த்திடுவோம் - கனிவின்

 

2.         கசந்த மாரா வாழ்வினை மதுரமாக மாற்றியே - 2

            தேனிலும் இனிய வாக்குகளாலே

            தேற்றி நம்மை ஆற்றிடுவார் - 2

            அந்த நல் தேவனை வாழ்த்திடுவோம் - கனிவின்

 

3.         யோர்தானை போன்ற துன்பமும்

            துயரமும் வந்தபோதிலும் - 2

            தேவ புயங்களின் பெலமதினால்

            சோர்வில்லாமல் கடந்து வந்தோம் - 2

            வல்ல நல் தேவனை வாழ்த்திடுவோம் - கனிவின்

 

4.         சத்துரு சேனை எழும்பியே

            நமக்கெதிராய் வந்தாலும் - 2

            நமக்காய் யுத்தம் செய்திடும் கர்த்தர்

            சேனையதிபனாய் முன் செல்கின்றார் - 2

            அவரின் கரங்களைப் பற்றி கொள்வோம் - கனிவின்

 

5.         ஜீவியம் என்னும் தோணியில்

            பாயும் அலைகளின் ஓளங்களில் - 2

            மாயமான வீண் பாரங்களும்

            புயலால் மோதினால் என்ன செய்வாய்

            பயப்படாதே இயேசுவைப் பார் - கனிவின்

 

 

YouTube Link

 

 

 

 

 

 

கிறிஸ்தவ பாடல் தொகுப்பு

 

PDF பாடல் புத்தகங்கள் பதிவிறக்கம்

Comments

Popular posts from this blog

உன்னதரே உம் மறைவில் தங்கி வாழ்கிறேன்

என் வாழ்விலே நீர் பாராட்டின

தாய் மறந்தாலும் நீர் மறப்பதில்லையே