கிருபை வாசல் அடைந்திடும் முன்னே
கிருபை வாசல் அடைந்திடும் முன்னே
என்னையும் சேர்த்தருளும்
நாதா நான் வந்தேன் உம் பாதத்தில்
என்னைத் தந்தேன்
உம் இரத்தத்தால் கழுவும் ஜயா
1. பாரங்கள் பெருகும் போது
நண்பர்கள் விலகும் போது - 2
நன்மைகள் பலவற்றிற்கும் தடைகள் வரும் போது
உறவினர் நிந்தித்து என்றென்றும் தள்ளும்
போது
உம் கரங்களில் என்னை அர்பணிக்கின்றேன். - கிருபை
2. வசனத்தின் ஆழங்களும்
துதியின் பாடல்களும் - 2
ஆறுதலின் வார்த்தைகளும் இதயத்தில் வந்திடுதே
கல்வாரியின் அன்பினை தியானித்திடுவேன் நான்
உம் நாமத்தை என்றும் உயர்த்திடுவேன்
Comments
Post a Comment