பாலரே நடந்து வாருங்கள்
சிபா. 13 இராகம்: பிலஹம்சா. தாளம்: ஏகம்
பல்லவி
1. பாலரே நடந்து வாருங்கள்,
காலையில்
எழுந்து கூடுங்கள்
மேலோகம் நோக்கிப்
பாருங்கள்
சாலவே சீவன்
சுகமும்
அனுபல்லவி
தந்த தேவனை மைந்த னேசுவைச்
சந்தோ
சத்துடன் போற்றிப் பாடுங்கள்!
சரணங்கள்
2. சிறுகண்கள் இரண்டு
தந்தனர்
தேவன்செய்தவை
நோக்கிப் பார்க்கவே;
சிறுசெவி இரண்டு
தந்தனர்
தேவன்சொல்லைக்
கேட்ப தற்குமே;
சிறப்பு டன்அவர்
பரத்தை நோக்கியே
திவ்ய வார்த்தையை
கேட்டு வாருங்கள் - பாலரே
3. சிறியகால் இரண்டு
தந்தனர்
செல்லவே மோட்ச பாதையில்,
சிறுகைகள் இரண்டு
தந்தனர்
செய்யவே தேவ ஊழியம்;
சீக்கி ரம்அந்தப் பாதை சென்றுமெய்த்
தேவ னைத்தினம்
சேவித் தேத்துங்கள் - பாலரே
4. நாவுமோர் மிடறுந்[1] தந்தனர்
நன்மையைப் பேசிப் பாடவே
மாஇளம் இதயம்
தந்தனர்
வால வயதில்
அவரை நோக்க
ஆத லால்நம திருத யத்தையே
அவருக் காலய மாய்ப்ப டைப்போமே!
- பாலரே
5. தூதர்கள் அனந்தம்
பேர்முனி
மாதவர் அநேக மாயிரம்
சுத்தர்கள்
நரரும் யாவரும்
பத்தியாய் வணங்கிப்
போற்றுமோர்
துய்ய தேவனை
திவ்ய நாதனை
மெய்ம னதுடன் தோத்த ரியுங்கள்
- பாலரே
- ஈசாக்கு பாக்கியநாதன்
Comments
Post a Comment