பாவ நாசக ரேசு பாடுபட் டுயிர்த்தார்

பாவ நாசக ரேசு பாடுபட் டுயிர்த்தார்

மேலும் அதிக பாடல்களுக்கு

 

 

 

 

 

 

 

220.

                   சீவநாயகர் ஈதோ சிசுவாக” என்னும் மெட்டு

 

                             பல்லவி

 

                   பாவ நாசக ரேசு பாடுபட் டுயிர்த்தார்

                   பாதாளம் விட்டேறிப் பார்த்துக் கேகிட

 

                             அனுபல்லவி

            தேவசமுகம் கண்டு சிறப்பாய் வீற்றிட - பாவ

 

                             சரணங்கள்

 

1.         பாவிகளுக் காக பரனி டத்திலே

            பரிந்துபேசிப் பாக்யம் பகிர்ந்த ளிக்கவே

            விரைந்து வாரும் போவோம், விமலனைப் பார்க்க - பாவ

 

2.         எல்லாம் செயங் கொண்ட ஏக சக்ராதிபதி

            நல்லார் மனதைத் தேற்ற நாதன் உயிர்த்தாரே

            பொல்லாததை எல்லாம் மீட்கப் பொறுமையா யிருந்து - பாவ

 

3.         மண்ணிலிருந் தெழுந்து விண்ணுக்குச் செல்ல

            மகிமையான தேவன் செயமாக உயிர்த்தார்

            ஆ என் நேசா நீயும் ஆயத்த மாகு - பாவ

 

4.         சாவின் பள்ளத்தாக்கைத் தாமாக செயித்து

            பேயின் தலையை வென்ற பிதாசுதன் உயிர்த்தார்

            பூவின் மனுடர்க் கெல்லாம் புண்ணிய மளித்திட - பாவ

 

5.         வானமண்டல வீட்டின் லோகத்திற்கு வர

            கோனார் இயேசுராசர் ஆயத்தமாயிருக்கிறார்

            அதால் நேசா நீயும் ஆயத்த மாகாயோ - பாவ

 

6.         அதோ பார்க்கும் யாரும் பயந்து நடுங்கிட

            இதோ சீக்கிரம் இயேசு வருவேன் என்கிறார்

            அதால் பாவி அவர் அருகில் ஓடிவா - பாவ

 

 

 

 

 

 

கிறிஸ்தவ பாடல் தொகுப்பு

 

PDF பாடல் புத்தகங்கள் பதிவிறக்கம்

Comments

Popular posts from this blog

உன்னதரே உம் மறைவில் தங்கி வாழ்கிறேன்

என் வாழ்விலே நீர் பாராட்டின

தாய் மறந்தாலும் நீர் மறப்பதில்லையே