குருசின் மேல் குருசின் மேல் காண்கின்ற

குருசின் மேல் குருசின் மேல் காண்கின்ற

மேலும் அதிக பாடல்களுக்கு

 

 

 

 

 

 

                             கண்ணிகள்

 

1.       குருசின் மேல் குருசின் மேல் காண்கின்ற தாரிவர் 

            பிராண நாதன் பிராண நாதன் என் பேர்க்காய்ச் சாகின்றார்

 

2.         பாவத்தின் காட்சியை ஆத்துமாவே பார்த்திடாய்

            தேவ குமாரன் மா சாபத்தி லாயினார்

 

3.         இந்த மா நேசத்தை நிந்தையாய்த் தள்ளினேன்

            இம்மகா பாவத்தை எந்தையே மன்னிப்பீர்

 

4.         பாவத்தை நேசிக்க நான் இனிச் சொல்வேனோ

            தேவனின் பிள்ளையாய் ஜீவிப்பேன் நானிதோ

 

5.         கஷ்டங்கள் வந்தாலும் நஷ்டங்கள் நேர்ந்தாலும்

            குருசின் காட்சியைத் தரிசித்துத் தேருவேன்

 

6.         சத்துருக்கள் தூஷணம் பேசியே நிந்தித்தால்

            நித்தமும் குருசினின் நேசத்தைச் சிந்திப்பேன்

 

7.         பாவத்தின் சோதனை கோரமாய் வந்திடில்

            ஆவலாய் குருசினின் காட்சியைச் சிந்திப்பேன்

 

8.         சூறாவளியைப் போல் சூழ்ந்திடும் ஆபத்தில்

            சிலுவையின் நேசத்தைச் சிந்தித்து நோக்குவேன்

 

9.         சத்துருக்கள் கூட்டமாய்ச் சண்டைக்குச் சூழ்கையில்

            சிலுவையில் காண்கின்ற நேசத்தைச் சிந்திப்பேன்

 

10.       இம்மகா நேசத்தை ஆத்மமே சிந்திப்பாய்

            இம்மானுவேலே நீர் என்னையும் நேசித்தீர்

 

 

 

YouTube Link
YouTube Link

 

 

 

 

 

 

கிறிஸ்தவ பாடல் தொகுப்பு

 

PDF பாடல் புத்தகங்கள் பதிவிறக்கம்

Comments

Popular posts from this blog

உன்னதரே உம் மறைவில் தங்கி வாழ்கிறேன்

என் வாழ்விலே நீர் பாராட்டின

தாய் மறந்தாலும் நீர் மறப்பதில்லையே