பாலைவனத்தை சோலைவனமாய்

பாலைவனத்தை சோலைவனமாய்

மேலும் அதிக பாடல்களுக்கு

 

 

 

 

 

 

                    பாலைவனத்தை சோலைவனமாய்

                        மாற்றிடுவார் நம் தேவன் - 2

                        எதற்கும் பயம் இல்லை

                        கலக்கம் நமக்கில்லை - 2

                        கரம் பிடித்து நடத்திடுவார்

 

1.         நீ தண்ணீர்களை கடக்கும் போது

            அவர் உன்னோடு இருப்பாரே

            நீ ஆறுகளைக் கடக்கும் போது

            அவைகள் புரளாதே - 2

            அக்கினியில் நடக்கும் போது

            ஜுவாலை பற்றாதே - 2 - பாலைவனத்தை

 

2.         தாகம் உள்ளவன் மேலே

            தண்ணீரை ஊற்றுவார்

            வறண்ட நிலத்தின் மேலே

            ஆறுகளை ஊற்றுவார் - 2

            உன் சந்ததியின் மேலே என்றும்

            தன் ஆவியை ஊற்றுவார் - 2 - பாலைவனத்தை

 

3.         நொறுங்குண்ட உந்தன் மனிதன்

            காயங்கள் ஆற்றுவார்

            சிறைப்பட்ட உந்தன் வாழ்வை

            விடுதலையாக்குவார் - 2

            உனக்கு விரோதமாய் எழும்பும்

            ஆயுதம் வாய்க்காதே - 2 - பாலைவனத்தை

 

 

- EVA. ALBERT SOLOMON

 

 

https://www.youtube.com/watch?v=K7J1z0mnKJo

 

 

 

 

 

 

கிறிஸ்தவ பாடல் தொகுப்பு

 

PDF பாடல் புத்தகங்கள் பதிவிறக்கம்

Comments

Popular posts from this blog

உன்னதரே உம் மறைவில் தங்கி வாழ்கிறேன்

என் வாழ்விலே நீர் பாராட்டின

தாய் மறந்தாலும் நீர் மறப்பதில்லையே