பாரீர் அருணோதயம் போல்

பாரீர் அருணோதயம் போல்

மேலும் அதிக பாடல்களுக்கு

 

 

 

 

 

 

            பாரீர் அருணோதயம் போல்

            உதித்து வரும் இவர் யாரோ

            முகம் சூரியன் போல் பிரகாசம்

            சத்தம் பெரு வெள்ள இரைச்சல் போலே

 

                        இயேசுவே ஆத்ம நேசரே

                        சாரோனின் ரோஜாவும் லீலி புஷ்பமும்

                        பதினாயிரங்களில் சிறந்தோர் - ஆ

 

1.         காட்டு மரங்களில் கிச்சிலி போல்

            எந்தன் நேசர் அதோ நிற்கிறார்

            நாமம் ஊற்றுண்ட பரிமளமே

            இன்பம் ரசத்திலும் அதி மதுரம் - இயேசுவே

 

2.         அவர் இடது கை என் தலை கீழ்

            வலக்கரத்தாலே தாங்குகிறார்

            அவர் நேசத்தால் சோகமானேன்

            என் மேல் பறந்த கொடி நேசமே - இயேசுவே

 

3.         என் பிரியமே ரூபவதி

            என அழைத்திடும் இன்ப சத்தம்

            கேட்டு அவர் பின்னே ஓடிடுவேன்

            அவர் சமூகத்தில் மகிழ்ந்திடுவேன் - இயேசுவே

 

4.         என் நேசர் என்னுடையவரே

            அவர் மார்பினின் சாய்ந்திடுவேன்

            மணவாளியே வா என்பாரே

            நான் செல்வேன் அந்நேரமே - இயேசுவே

 

5.         நாம் மகிழ்ந்து துதித்திடுவோம்

            ஆட்டுக்குட்டியின் மணநாளிலே

            சுத்தப் பிரகாச ஆடையோடே

            பறந்திடுவோம் நாம் மேகத்திலே - இயேசுவே

 

 

YouTube Link

 

 

 

 

 

 

கிறிஸ்தவ பாடல் தொகுப்பு

 

PDF பாடல் புத்தகங்கள் பதிவிறக்கம்

Comments

Popular posts from this blog

உன்னதரே உம் மறைவில் தங்கி வாழ்கிறேன்

என் வாழ்விலே நீர் பாராட்டின

தாய் மறந்தாலும் நீர் மறப்பதில்லையே