காலையில் தேவனைத் தேடிடுவோம்
காலையில் தேவனைத் தேடிடுவோம்
வேளையிதே
அவர் வெளிப்படுவார்
தேவனைத் தேடிடும் நேரமிதே
தேடிப் பரன்முகம் கண்டடைவோம்
1. அதிகாலையில் எழுந்திடுவோம்
துதிபலியவர்க்கே
செலுத்திடுவோம்
புதுபல கிருபைகள்
அடைந்திடவே
புகழ்ந்தவர் நாமத்தை போற்றிடுவோம்
2. ஆத்ம நேசரை தேடிடுவோம்
ஆவலுடன் அதிகாலையில்
ஆயத்தமாகியே
காத்திருப்பேன்
ஆண்டவர் என் ஜெபம்
கேட்டிடுவார்
3. கண்மணிபோல் சென்ற இராவினிலே
கண்ணுறங்காமலே
காத்தனரே
இன்னும் வரும் பகல் முழுவதிலும்
இன்னல்கள் நீக்கியே காத்திடுவார்
4. கன்மலையும் எந்தன் மீட்பரும் நீர்
என் நினைவும் எந்தன் வார்த்தைகளும்
உம் சமூகம் பிரீதியாயிருக்க
உன்னதமான பெலன் தந்திடுவீர்
5. உந்தன் வருகையை எண்ணியே நான்
எந்த வேளையிலும் ஆயத்தமாய்
இந்த புவிதினம்
வாழ்ந்திடவே
சொந்த என் இராஜ்யம்
நாடுகிறேன்
Comments
Post a Comment