அலங்கோலமான உன் வாழ்வை அலங்கமாய் மாற்றிடுவார்
அலங்கோலமான உன் வாழ்வை அலங்கமாய் மாற்றிடுவார்
நீதியும் மகிமையும் கொடுத்து கிரீடமாய்
அலங்கரிப்பார் - 2
இந்த ஆண்டு முழுவதும் நிறைவாய் அலங்கரிப்பார்
அனுபல்லவி
மகிமையால் அலங்கரிப்பார்
உன்னை உயர்த்தி அலங்கரிப்பார்
கனத்தினால் அலங்கரிப்பார்
இசைவாய் அலங்கரிப்பார்
இடிந்ததை அலங்கரிப்பார்
அவர் உடைந்ததை அலங்கரிப்பார்
சிதைந்ததை அலங்கரிப்பார்
நிர்மூலமானதை அலங்கரிப்பார்
சரணங்கள்
1. அதிசயம் செய்யும் தேவன் உன்னை அழகாய் அலங்கரிப்பார்
ரெகொபோத் ஆசீர்
தந்து உன்னை அளவில்லா அலங்கரிப்பார் - 2
அனுகிரகம் செய்து
நன்மையை கொடுத்து அலங்கரிப்பார் - மகிமையால்
2. தயையும் பட்சமும் வைத்து உன்னை கிரீடத்தால்
அலங்கரிப்பார்
மகிமையாய் தினமும் நடத்தி உன்னை கீர்த்தியாய்
அலங்கரிப்பார் - 2
கிரீடத்தை சூட்டி கீர்த்தியாய் வைத்து
அலங்கரிப்பார் - மகிமையால்
3. கீழ்மையில் இருந்து தூக்கி உன்னை மேன்மையை
அலங்கரிப்பார்
கீத வாத்தியங்கள் முழங்க உன்னை மகிழ்ச்சியால்
அலங்கரிப்பார்
கீழ்மையை மாற்றி மகிழ்ச்சியை தந்து அலங்கரிப்பார்
- மகிமையால்
- Dr. T. Mukilraj
Comments
Post a Comment