கருணையின் தேவா கனிதரும் மூவா

கருணையின் தேவா கனிதரும் மூவா

மேலும் அதிக பாடல்களுக்கு

 

 

 

 

 

 

 

                             பல்லவி

 

          கருணையின் தேவா! கனிதரும் மூவா!

            கர்த்தா! உமக்கே ஸ்தோத்திரம்

 

                                    அனுபல்லவி

 

                        பரலோகனே - பவ நாசனே

                        பரனே - கரனே - உமை

                        கண்டு மகிழ்ந்திடவே எமக்காசை

                        கருணா நிதியே காத்திடுவாயே - கருணையின்

 

2.         வல்லமை ஞானம் நீதி நிறைந்த

            வள்ளலே உமக்கே ஸ்தோத்திரம் - 2

                        வரந்தாருமே - வந்து காருமே - (2)

                        வந்தோம் - தந்தோம் - உந்தன்

                        சுந்தரக் கரத்தினில் மைந்தர்களெமையே

                        வருவாய் - தருவாய் அருள் மாரியை யிப்போ - கருணையின்

 

3.         பலியாக உமையே பாவிக்காய் ஈந்த

            பரனே உமக்கே ஸ்தோத்திரம் - 2

                        புறம்பானீரோ - புவிமீதிலே - (2)

                        புகழ்வேன் - மகிழ்வேன் - உந்தன்

                        பொற்பாதம் பணிந்துமே ஆனந்தக் களிப்புடன்

                        பொல்லா உலகின் இன்பத்தை வெறுத்து - (2) - கருணையின்

 

4.         நித்ய மணாளா! நிர்மல நாதா!

            நேசரே உமக்கே ஸ்தோத்திரம் - 2

                        நினையா நேரம் வருவீரையா - (2)

                        நிதமே - விழப்பாய் - உமைச்

                        சந்திக்க ஆயத்த மாயிருந்திடவே

                        நேசா ஜெபிக்க ஏவுதல் தாரும் - (2) - கருணையின்

 

 

YouTube Link

 

 

 

 

 

 

கிறிஸ்தவ பாடல் தொகுப்பு

 

PDF பாடல் புத்தகங்கள் பதிவிறக்கம்

Comments

Popular posts from this blog

உன்னதரே உம் மறைவில் தங்கி வாழ்கிறேன்

என் வாழ்விலே நீர் பாராட்டின

தாய் மறந்தாலும் நீர் மறப்பதில்லையே