24 September 2025

மனதுருகும் தெய்வமே இயேசைய்யா

மனதுருகும் தெய்வமே இயேசைய்யா

மேலும் அதிக பாடல்களுக்கு

 

 

 

 

 

 

          மனதுருகும் தெய்வமே இயேசைய்யா

            மனதாரத் துதிப்பேன் ஸ்தோத்தரிப்பேன்

 

                        நீர் நல்லவர் சர்வ வல்லவர்

                        உம் இரக்கத்திற்கு முடிவே இல்லை

                        உம் அன்பிற்கு அளவே இல்லை

                        அவை காலைதோறும் புதிதாயிருக்கும்

 

1.         மெய்யாக எங்களது

            பாடுகளை ஏற்றுக் கொண்டு

            துக்கங்களை சுமந்து கொண்டீர் - ஐயா

 

2.         எங்களுக்கு சமாதானம்

            உண்டு பண்ணும் தண்டனையோ

            உம்மேலே விழுந்ததையா - ஐயா

 

3.         சாபமான முள்முடியை

            தலைமேலே சுமந்து கொண்டு

            சிலுவையிலே வெற்றி சிறந்தீர் - ஐயா

 

4.         எங்களது மீறுதலால்

            காயப்பட்டீர் நொறுக்கப்பட்டீர்

            தழும்புகளால் சுகமானோம் - உந்தன்

 

5.         தேடிவந்த மனிதர்களின்

            தேவைகளை அறிந்தவராய்

            தினம் தினம் அற்புதம் செய்தீர் - ஐயா

 

 

- பெர்க்மான்ஸ்

 

 

YouTube Link

 

 

 

 

 

 

கிறிஸ்தவ பாடல் தொகுப்பு

 

PDF பாடல் புத்தகங்கள் பதிவிறக்கம்

 

No comments:

Post a Comment

அவர் நாமத்தில் இயேசு நாமத்தில்

பாடல் To Download Txt Lyrics file     Youtube Link               அவர் நாமத்தில் இயேசு நாமத்தில்          ...