23 September 2025

மரணமே உன் கூர் எங்கே பாதாளமே

மரணமே உன் கூர் எங்கே பாதாளமே

மேலும் அதிக பாடல்களுக்கு

 

 

 

 

 

 

                   மரணமே உன் கூர் எங்கே?

                        பாதாளமே உன் ஜெயம் எங்கே? - (2)

                        மரணத்தை ஜெயித்த மன்னவன் இயேசு எனக்குள் வந்துவிட்டார்

                        சாவை அழித்து அழியா வாழ்வை எனக்குத் தந்து விட்டார் - 2 - மரணமே

 

1.         சாவுக்கு அதிபதி சாத்தானை - இயேசு

            சாவாலே வென்று விட்டார் - 2

            மரண பயத்தினால் வாடும் மனிதரை

            விடுவித்து மீட்டுக் கொண்டார் - 2

 

                        பயமில்லையே மரண பயமில்லையே

                        ஜெயம் எடுத்தார் இயேசு ஜெயம் எடுத்தார்

                        மரணமே உன் கூர் எங்கே?

 

2.         அழிவுக்கு உரிய இவ்வுடல் - ஒருநாள்

            அழியாமை அணிந்து கொள்ளும் - 2

            சாவுக்கு உரிய இவ் உடல் ஒருநாள்

            சாகாமை அணிந்து கொள்ளும் - 2

 

                        பயமில்லையே மரண பயமில்லையே

                        ஜெயம் எடுத்தார் இயேசு ஜெயம் எடுத்தார்

                        மரணமே உன் கூர் எங்கே?

 

3.         இறந்தோர் மேலும் வாழ்வோர் மேலும்

            ஆளுகை செய்திடவே - 2

            இயேசு மரித்து உயிர்த்து எழுந்தார்

            இன்றைக்கும் ஜீவிக்கிறார் - 2

 

                        பயமில்லையே மரண பயமில்லையே

                        ஜெயம் எடுத்தார் இயேசு ஜெயம் எடுத்தார்

                        மரணமே உன் கூர் எங்கே?

 

4.         கட்டளை பிறக்க சுதன் குரல் ஒலிக்க

            கர்த்தர் இயேசு வந்திடுவார் - 2

            கிறிஸ்துவிற்குள் வாழ்வோர் கிறிஸ்துவிற்குள் மரித்தோர்

            எதிர் கொண்டு சென்றிடுவோம் - 2

 

                        பயமில்லையே மரண பயமில்லையே

                        ஜெயம் எடுத்தார் இயேசு ஜெயம் எடுத்தார்

                        மரணமே உன் கூர் எங்கே?

 

 

- பெர்க்மான்ஸ்

 

 

YouTube Link

YouTube Link

 

 

 

 

 

 

கிறிஸ்தவ பாடல் தொகுப்பு

 

PDF பாடல் புத்தகங்கள் பதிவிறக்கம்

No comments:

Post a Comment

ஆஸ்திகளெல்லாம் ஈடாகுமா என்

நிஜீ.கீதங்கள்:1971 To Download Txt Lyrics file   Youtube Link                      ஆஸ்திகளெல்லாம் ஈடாகுமா    ...