மத்திய பானத்தில் மிக நித்தியம்
370.
இராகம்: கல்யாணி அடதாள
சாப்பு (495)
பல்லவி
மத்திய[1]
பானத்தில்
மிக நித்தியம்
கருத்து வைக்கும்
மானிடரே கேளீர்
அனுபல்லவி
புத்தி
மழுங்கவும்
நும் புகழ்
அழிந்திடவுமே
சித்தம்
உமக்குண்டானால்
தெளிந்து குடியும்;
சும்மா - மத்திய
சரணங்கள்
1. பாம்பை
மடியில் வைப்பாரோ?
பழகினாலும்
பயம்
இன்றி அதை மொய்ப்பாரோ?
வேம்பு
கசப்பில்,
என்பரோ?-மதுக் குடிக்க
விரும்பு கின்றீர், நல்லதோ?
நாம்
பிசகோம் என்றும்,
நடந்து திரிவோம்,
என்றும்
வீம்புகள்
சொல்வதேன்?
விழுவீர்,
விழுவீர்;
காணும் - மத்திய
2. கைப் பொருள்
இழந்திடவும்-புதல்வரொடு
காதலி[2] அழிந்திடவும்
மெய்ப் பொருள்
மறைந்திடவும்
எரிநரகில்
வீழ்ந்ததில்
உறைந்திடவும்
தற்பரன் அருள்
இங்குதான் இழக்கவும்
வேண்டில்,
எப்படியும்
குடியும் இளைத்துச்
சுணங்கிக்கொண்டு
- மத்திய
3. சற்றும்
விருப்பம் வேண்டாம்-மதுவில்,
அது
சதித்துக்
கெடுத்து விடுமே;
முற்றும்
இயேசுபரன்
மேல்-உரிமையாக
முழுதும்
அன்படைந்
தவரைப்
பற்றி
விசுவாசித்து;
பரகதிக்[3] காளாக
உற்ற
மதுக் குடியை
உடனே விடுதல் நன்றே
- மத்திய
- ஜாண் பால்மர்
Comments
Post a Comment