மங்களம் ஜெய மங்களம் மாசில்லா

மங்களம் ஜெய மங்களம் மாசில்லா

மேலும் அதிக பாடல்களுக்கு

 

 

 

 

 

 

30. இராகம்: இங்கிலீஷ்                                                        ஆதிதாளம் (383)

 

                             பல்லவி

 

                   மங்களம்! ஜெயமங்களம்

                        மாசில்லா திரியேகர்க்கு!

 

                             அனுபல்லவி

 

                        சங்கையின் ராஜர்க்கு - எங்குமாபுகழ் நேசர்க்கு - மங்

 

                             சரணங்கள்

 

1.         அந்தம் ஆதி யில்லாதவர், - விந்தையுலகம் செய்தவர்,

            முந்த நமை நேசித்தவர், - மூவுலகுக்கும் ஆண்டவர்

            சந்ததம் வாழ்பவர், எந்தையாம் பிதாவுக்கு. - மங்

 

2.         வான லோகமே விட்டு, - ஈனப் பாவியை யிட்டு

            தானமா யுயிர் விட்டு, தீன நரரைத் தான் மீட்டு,

            வாழும் மணவா ளர்க்கு - நன்மை செய் மனுவேலர்க்கு.  - மங்

 

3.         சுத்த இதயமே தந்து, - பக்தர் மனதிலே வந்து,

            அத்த னாலயமா யீந்து - நித்தம் துதிபெற நின்று,

            சத்தியம் போதிக்கும் - சுவாமி பரிசுத்தாவிக்கும். - மங்

 

- அருள்திரு. சா. சீமோன்

 

 

YouTube Link
பாடலை கேட்க இங்கே சொடுக்குங்கள்...

Popular posts from this blog

உன்னதரே உம் மறைவில் தங்கி வாழ்கிறேன்

என் வாழ்விலே நீர் பாராட்டின

தாய் மறந்தாலும் நீர் மறப்பதில்லையே