மதுரமான தேவ அன்பே
மதுரமான
தேவ அன்பே
மாறிடாத
இயேசுவின் அன்பே
அல்லும்
பகலும் எந்தன்
பாதை
ஆற்றி
தேற்றிடும் தூய
அன்பே
அருமை
ஆண்டவர் தியாக
அன்பே
1. அடிமை ரூபம்
எடுத்த தேவா
அவஸ்தை
பாடு சகித்த தேவா
மானுட வடிவில்
தோன்றினீரே
மரண பரியந்தம்
தாழ்த்தினீரே
2. சிலுவை
நிழலில் களைத்து
நின்றேன்
சுகம் சந்தோஷம்
மீட்படைந்தேன்
புதுமையானேன்
ஜீவன் தந்தீர்
புனித வாழ்க்கையின்
சாட்சி இதுவே
3. உமது அன்போ
நெருக்கி ஏவ
உலக மேன்மை
உதறி தள்ளி
உமது பின்னே
ஓடி வந்தேன்
உரிமையோடேன்னை
நடத்துவீரே
4. பாவம் பெருகும்
அன்பு தணியும்
தேவ கோபம்
வந்திறங்கும்
பூதலமோ
வெந்தழியும்
பரம அன்பை
நான் காத்துக்
கொள்வேன்
5. திரும்பி
வாரும் அன்பின்
தேவா
விரும்பி
உம்மை அழைக்கின்றேனே
திருமுகத்தை
நேரில் காண
தினமும்
ஜெபத்துடன்
காத்திருப்பேன்
- சாராள்
நவரோஜி
Comments
Post a Comment