மணவாட்டியே என் சபையே
மணவாட்டியே
என் சபையே
விழித்தெழு
சீயோன் திருச்சபையே
உன்னில்
மகிமை அடைந்திடவே
உன்னை
பூவினில் கண்டெடுத்தேன்
1. உள்ளான
அழகு என் பிரியம்
உபதேசத்தில்
நிலைத்திருப்பாய்
என் பிரியமே
ரூபவதி
உன்னில்
நான் மகிழ்ந்திடுவேன்
2. கூர்மையும்
புதிதும் எந்திரமாய்
மலைகளை
நொறுக்கிடுவாய்
தகர்த்திடுவாய்
குன்றுகளை
பாதாள வாசல்கள்
மேற்கொள்ளாதே
3. உந்தனின்
கிரியை நான் அறிவேன்
உண்மை ஊழியம்
செய்திடுவாய்
ஜனம் தருவேன்
ஜெயம் தருவேன்
உன்னை நான்
கனம் பண்ணுவேன்
4. உன்னையே
தோட்டத்தில் நாட்டினேன்
நான்
என்றுமாய்
கனி தரவே
படர்ந்திடுவாய்
வளர்ந்திடுவாய்
என் வாசம்
என்றும் இன்பமிதே
5. பரிசுத்தம்
காத்து ஆயத்தமாய்
வானில்
நீ பறந்திடவே
மகிமையிதே
பரவசமே
உன்னை சந்திக்கும்
நாளதனிலே
YouTube Link
Comments
Post a Comment