மலைமேல் ஏறுவோம் மரங்களை
மலைமேல்
ஏறுவோம்
மரங்களை
வெட்டுவோம்
ஆலயம் கட்டுவோம்
அவர் பணி
செய்திடுவோம்
நாடெங்கும்
சென்றிடுவோம்
நற்செய்தி
சொல்லிடுவோம்
சபைகளை
நிரப்பிடுவோம்
சாட்சியாய்
வாழ்ந்திடுவோம்
1. தேவனின்
வீடு பாழாய்க்
கிடக்குதே
நாமோ நமக்காய்
வாழ்வது நியாயமா
- 2 - நாடெங்கும்
2. திரளாய்
விதைத்தும் கொஞ்சமாய்
அறுப்பதேன்
வருகின்ற
பணமெல்லாம்
வீணாய்ப் போவதேன்
- 2 - நாடெங்கும்
3. மனம் தளராமல்
பணியைத் தொடருங்கள்
படைத்தவர்
நம்மோடு பயமே வேண்டாம்
- 2 - நாடெங்கும்
4. தேவன் தந்த
ஆரம்ப ஊழியத்தை
அற்பமாய்
எண்ணாதே அசட்டை
பண்ணாதே - 2 - நாடெங்கும்
5. ஜனங்கள்
விரும்புகின்ற
தலைவர் வந்திடுவார்
மகிமையால்
நிரப்பிடுவார்
மறுரூபமாக்கிடுவார்
- 2 - நாடெங்கும்
- பெர்க்மான்ஸ்
YouTube Link
Comments
Post a Comment