மலர் தூவியே வாழ்த்திப் பாடுவோம்

மலர் தூவியே வாழ்த்திப்

மேலும் அதிக பாடல்களுக்கு

 

 

 

 

 

 

          மலர் தூவியே வாழ்த்திப் பாடுவோம்

            மங்களங்கள் செழிக்க மகிழ்ந்து பாடுவோம் - நாம்

 

                        ஆர்ப்பரிப்போம், ஆனந்திப்போம்

                        வாழ்க, வாழ்க, வாழ்க என்று வாழ்த்திப் பாடுவோம்

 

1.         வானத்தில் பறந்திடும் பறவைகளாய்

            விண்ணினில் பூத்திடும் விண் மீன்களாய்

            என்றும் ஜொலித்து என்றும் பறந்து

            சந்தோஷமாய் வாழ்ந்திட கீதம் பாடுவோம் - மலர்

 

2.         ஆவியின் கனிகளால் நிறைந்திடவே

            அன்பின் வழிதனில் நடந்திடவே

            அல்லும் பகலும் ஜெபம் செய்திட

            ஆண்டவரை நாமும் வேண்டிடுவோம் - மலர்

 

3.         செல்வங்கள் பல பெற்று செழிப்புறவே

            நன்மைகள் தினமும் நாடி வரவே

            மீட்பர் பாதத்தில் நன்றி கூறியே

            நல்லவரை வல்லவரை என்றும் துதிப்போம் - மலர்

 

 

 

 

 

 

கிறிஸ்தவ பாடல் தொகுப்பு

 

PDF பாடல் புத்தகங்கள் பதிவிறக்கம்

Comments

Popular posts from this blog

உன்னதரே உம் மறைவில் தங்கி வாழ்கிறேன்

என் வாழ்விலே நீர் பாராட்டின

தாய் மறந்தாலும் நீர் மறப்பதில்லையே