மண்ணின் சாயல் மாறுமே
மண்ணின்
சாயல் மாறுமே
விண்ணின்
சாயல் ஆகுமே
மறுரூபமாவேன்
இயேசுவிலே - (என்)
- 2
1. பசி
தாகம் எல்லாம்
உலகமதில்
பஞ்சமும்
துன்பமும் இல்லையங்கு
- 2
வியாதியும்
இல்லையே வருத்தமும்
இல்லையே
தேவனின்
ராஜ்யம் இன்பத்தின்
எல்லையே
என்று
நான் காண்பேனோ
பரலோகினை
- என் - மண்ணின்
2. ஜீவ
தண்ணீருள்ள நதி
ஒன்றுண்டாம்
கனி
தரும் ஜீவ விருட்சமுண்டாம்
- 2
சூரியன்
சந்திரன் வேண்டுவதில்லையே
தேவனின்
மகிமையில் ஒளி
வெள்ளமே
பொற்தள வீதியில்
உலாவுவேன்
- என் - மண்ணின்
3. சீக்கிரம்
வருவேன் என்று
சென்றவர்
நடுவானில்
தோன்றிடும் நாள்
நெருங்குதே - 2
மணவாட்டி
நானுமே ஆயத்தமாகுவேன்
நேசரைக்
காணவே ஆவலும் பொங்குதே
என்று
நான் காண்பேனோ
என் இயேசுவை - என்
- மண்ணின்
- John & Vasanthy
YouTube Link
PDF பாடல்
புத்தகங்கள்
பதிவிறக்கம்
Comments
Post a Comment