மலைகள் விலகிப் போனாலும் பர்வதம்
மலைகள்
விலகிப் போனாலும்
பர்வதம்
நிலையற்றுப் போனாலும்
தேவ கிருபையோ
விலகாது
1. பூமியில்
உம்மைத்தவிர யாருமில்லையே
பரலோகில்
உம்மைத் தவிர யாருமில்லையே
நீரின்றி
துணையேதைய்யா
நீரின்றி
வழியேதைய்யா
(2)
2. பூமியில்
அந்நியனும் பரதேசி
நான்
நீரென்னை
காண்கின்ற தெய்வமல்லவோ
உலகத்தின்
முடிவுவரை நடத்திடும்
தெய்வமே
3. யாரென்னை
வெறுத்தாலும்
வெறுக்காதவர்
அனுதினம்
தாங்கிடும் கிருபை
அல்லவோ
நிற்பதும்
நிலைப்பதும் கிருபையில்தானே
4. தண்ணீரைக்
கடக்கும் போதும்
என்னோடுண்டு
ஆறுகளை
கடக்கும் போதும்
என்னோடுண்டு
அக்கினியில்
நடந்தாலும் எரிந்து
நான் போவதில்லை
நீரின்றி
உமது சமூகம் வரும்
போதெல்லாம்
- Pastor Lucas Sekar
Comments
Post a Comment