24 September 2025

மறைவிடமே ஆராதனை உறைவிடமே

மறைவிடமே ஆராதனை உறைவிடமே

மேலும் அதிக பாடல்களுக்கு

 

 

 

 

 

 

          மறைவிடமே ஆராதனை

            உறைவிடமே உமக்கு ஆராதனை

            அடைக்கலமே ஆராதனை

            புகலிடமே உமக்கு ஆராதனை

 

                        ஆராதனை உமக்கு ஆராதனை

                        என்னை நேசிக்கும் இயேசுவே ஆராதனை

                        ஆராதனை உமக்கு ஆராதனை

                        என்னை ஆதரிக்கும் இயேசுவே ஆராதனை

 

1.         பக்கத்தில் ஆயிரம் பேர் விழுந்தாலும்

            என்னை அணுகாமல் காப்பவரே

            வலப்பக்கத்தில் பதினாயிரம் விழுந்தாலும்

            என்னை அணுகாமல் காப்பவரே - 2

 

                        அடைக்கலமான என தாபரமே

                        (என்னை) அணுகாமல் காப்பவரே - 2 மறைவிடமே

 

2.         இச்சகம் பேசிடும் நாவுகள் முன்னிலே

            என்னை காப்பவரே

            நன்மைக்கு மைமாறாய்

            தீமை செய்வோர் மத்தியில்

            என்னை காப்பவரே - 2

 

                        துரோகங்கள் நிறைந்த பூமியிலே

                        துணை நின்று காப்பவரே

                        தெவிட்டாமல் நேசிக்கும் என் நேசரே

                        என்னை என்றும் காப்பவரே - மறைவிடமே

 

 

- K.P. ஜோசப்

 

 

 

 

 

 

 

கிறிஸ்தவ பாடல் தொகுப்பு

 

PDF பாடல் புத்தகங்கள் பதிவிறக்கம்

No comments:

Post a Comment

இந்தக் கடைசி காலத்திலே எக்காளம் தொனிக்கையில்

கீ.கீ:683 Youtube Link     1.       இந்தக் கடைசி காலத்திலே எக்காளம் தொனிக்கையில்             இயேசு விண்ணகத்தில்...