மகிழ்ந்து களிகூரு மகனே

மகிழ்ந்து களிகூரு மகனே

மேலும் அதிக பாடல்களுக்கு

 

 

 

 

 

 

                   மகிழ்ந்து களிகூரு மகனே (மகளே)

                        பயம் வேண்டாம்

                        மன்னவன் இயேசு உன் (நம்) நடுவில்

                        பெரியகாரியம் செய்திடுவார்.

 

1.         தேவையை நினைத்து திகையாதே

            தெய்வத்தைப் பார்த்து நன்றி சொல்லு

            கொஞ்சத்தைப் கண்டு குழம்பாதே

            கொடுப்பார் உண்டு கொண்டாடு

 

2.         அப்பாவின் புகழை நீ பாடு

            அதுவே உனக்கு Safe Guard

            தப்பாமல் மகிழ்ந்து உறவாடு

            எப்போதும் வாழ்வாய் சுகத்தோடு

 

3.         மீனின் வயிற்றில் யோனா போல்

            கூனிக் குறுகிப் போனாயோ

            பலியிடு துதியை சப்தத்தோடு

            விலகிடும் எல்லாம் வெட்கத்தோடு

 

4.         நிலையான நகரம் நமக்கில்லை

            வரப்போகும் நகரையே நாடுகிறோம்

            இயேசுவை உயர்த்தும் ஸ்தோத்திரப்பலி

            இப்போதும் எப்போதும் செலுத்திடுவோம்

 

5.         துதிக்கும் போது நம் நடுவில்

            உட்கார நாற்காலி போடுகிறோம்

            துதிகளை அரியணையாக்கிடுவார்

            வந்து அமர்ந்து மகிழ்ந்திடுவார்

 

 

- பெர்க்மான்ஸ்

 

 

YouTube Link
பாடலை கேட்க இங்கே சொடுக்குங்கள்...

Popular posts from this blog

உன்னதரே உம் மறைவில் தங்கி வாழ்கிறேன்

என் வாழ்விலே நீர் பாராட்டின

தாய் மறந்தாலும் நீர் மறப்பதில்லையே