மலைகள் விலகினாலும் பர்வதம்
மலைகள்
விலகினாலும்
பர்வதம்
நிலை பெயர்ந்தாலும்
என்
கிருபை உன்னை விட்டு
என்றும் நீங்காது
- 2
1. தண்ணீரை
கடக்கும் போது
உன்னோடு
இருப்பேன் என்றீர்
ஆறுகளை
கடக்கும் போது
அவைகள்
உன் மேல் புரளுவதில்லை
அக்கினியில்
நீ நடக்கும் போது
அக்கினி
சேதப்படுத்தாது
- 2 - மலைகள்
2. பயப்படாதே
உன்னை மீட்டுக்
கொண்டேன்
உன்
பெயர் சொல்லி நான்
அழைத்தேன்
திகையாதே
நான் உன் தேவன்
நீதியின்
கரத்தால் தாங்கிடுவேன்
உன்னை என்றும்
பலப்படுத்தி
உனக்கு
சகாயம் செய்திடுவேன்
- 2 - மலைகள்
- Bro. G. Jacob
Comments
Post a Comment