மலைகள் விலகிப் போனாலும் மகிழ்ந்து பாடுவேன்
மலைகள்
விலகிப் போனாலும்
மகிழ்ந்து பாடுவேன்
பர்வதங்கள்
பெயர்ந்தாலும்
துதித்து பாடுவேன்
எந்தன்
இயேசு என்னை கைவிட
மாட்டார்
இயேசு என்னை
மறந்திட மாட்டார்
ஆராதிப்பேன்
ஆராதிப்பேன்
என் அன்பரைத் துதித்துப்
பாடுவேன்
1. தண்ணீர்களை
கடந்தாலும் சோர்ந்திட
மாட்டேன்
அக்கினியில்
நடந்தாலும் அழுதிட மாட்டேன்
எந்தன்
இயேசு என்னை சுமந்திடுவாரே
இயேசு என்னை
ஆதரிப்பாரே
2. மரணமோ நாசமோ
பயப்பட மாட்டேன்
துன்பமோ
தொல்லையோ
கலங்கிட மாட்டேன்
எந்தன்
இயேசு என்னை காத்திடுவாரே
இயேசு என்னை
நடத்திடுவாரே
3. செங்கடலோ
யோர்தானோ
முன்னே வந்தாலும்
எரிகோவின்
கோட்டைகள் முன்னே
வந்தாலும்
எந்தன்
இயேசு எனக்கு ஜெயம்
தருவாரே
இயேசு எல்லாம்
பார்த்துக் கொள்வாரே
Comments
Post a Comment