05 September 2025

மகிமையின் ராஜா மகிமையோடு

மகிமையின் ராஜா மகிமையோடு

மேலும் அதிக பாடல்களுக்கு

 

 

 

 

 

 

                   மகிமையின் ராஜா மகிமையோடு

                        வருகின்றார் மேகமீதில் - 2

                        ஆ... ஆனந்தமே ஆனந்தமே ஆனந்தமே

                        பேரானந்தமே - 2

 

1.         பூமி அதிசயிக்க வானோர் ஆர்ப்பரிக்க - (2)

            தூதர் தொனியுடனே மேகமீதில் வருவார் - (2)

            அன்பர்கள் நாங்கள் இயேசுவை சந்திப்போம்

            ஆனந்தம் ஆனந்தமே - 2 - மகிமையின்

 

2.         ஆசை மகிபனவர் பிதாவின் மகிமையோடு - (2)

            நேச மணவாட்டியை மறுரூபமாக்க வருவார் - (2)

            ஆவலாய் நாமும் இயேசுவை சந்திப்போம்

            ஆனந்தம் ஆனந்தமே - 2 - மகிமையின்

 

3.         சுத்த பிரகாசமாய் சித்திர தையலாடை - (2)

            தூய நீதியுடனே வெண் வஸ்திரம் தரிப்போம் - (2)

            விண்ணவர் சாயலில் இயேசுவை சந்திப்போம்

            ஆனந்தம் ஆனந்தமே - 2 - மகிமையின்

 

4.         ஆவியும் மணவாட்டியும் அழைத்திடும் நேரமல்லோ - (2)

            ஆயத்த விழிப்புடனே பூரணமடைந்திடுவோம் - (2)

            காலமும் சென்றது நேரமும் வந்தது

            ஆனந்தம் ஆனந்தமே - 2 - மகிமையின்

 

 

YouTube Link

 

 

 

 

 

 

கிறிஸ்தவ பாடல் தொகுப்பு

 

PDF பாடல் புத்தகங்கள் பதிவிறக்கம்

 

No comments:

Post a Comment

ஆஸ்திகளெல்லாம் ஈடாகுமா என்

நிஜீ.கீதங்கள்:1971 To Download Txt Lyrics file   Youtube Link                      ஆஸ்திகளெல்லாம் ஈடாகுமா    ...