மங்கள மணாளா மன்றல் ஆசி தா

ஞா.கீ:469

மேலும் அதிக பாடல்களுக்கு

 

 

 

 

 

 

469. இராகம்: ஆனந்தபைரவி                                       ஆதி தாளம்

 

                             பல்லவி

 

          மங்கள மணாளா! மன்றல் ஆசி தா; இம்மண மக்கள்

          இங்கிதமாய்[1] வாழ அருள் துங்கா! வளமாய்

 

                             அனுபல்லவி

 

            சங்கு நாதமே முழங்க, எங்கும் யேசு பேர் விளங்க

            சந்ததம்; துணையீந்து

            பெந்தமாய்; காத்து ரட்சை

            சொந்தமாய்; தயை நல்கி விந்தையாய் வாழ்ந்திட நாளும் - மங்கள

 

                             சரணங்கள்

 

            தம்பதிகளாம் இவர்கள் உம்பர்[2] போல் நீடுழிவாழ்ந்து

            தாட்சியின்றியே ஜெபங்கள் மாட்சியுடனே

            அம்பர[3] வாசிகளென தம்பிரானடி வணங்கி

            அந்தி சந்தி மத்தியானம் வந்தனை செய்து

            கம்பம்[4] போல் நிலைத்து வாழ எம்பரா அனுதினமும்

            காருமே; உன் கிருபை

            கூருமே; ஞானம் கல்வி

            தாருமே அடியாரைக் கண் பாருமே, பாருமே என்றும் - மங்கள

 

- ஈசாக்கு ஞானமுத்து

 

 

 

 

 

 

கிறிஸ்தவ பாடல் தொகுப்பு

 

PDF பாடல் புத்தகங்கள் பதிவிறக்கம்



[1] இன்பம்

[2] வானோர்

[3] விண்ணுலக

[4] தூண்

Comments

Popular posts from this blog

உன்னதரே உம் மறைவில் தங்கி வாழ்கிறேன்

என் வாழ்விலே நீர் பாராட்டின

தாய் மறந்தாலும் நீர் மறப்பதில்லையே