மணவாளன் வரும் நேரம் இந்த
மணவாளன்
வரும் நேரம் - இந்த
மணவாட்டி
சபை ஏகும் - 2
விழித்திருப்பாய்
நீ காத்திருப்பாய்
எதிர்கொண்டு
போக புறப்படுவாய்
- 2
1. தீவட்டி
என் கையிலே - எண்ணெய்
தீராது
என் வாழ்விலே
- 2
வழி
மீது விழி வைத்து
நான்
உமக்காக காத்திருப்பேன்
- 2 - விழித்திருப்பாய்
2. உலகிலே
பல கோடி
கன்னிகை
இருந்தாலும் -
2
நீர்
விரும்பும் கன்னிகையாய்
வாழ்ந்து
தினம் விழித்திருப்பேன்
- 2 - விழித்திருப்பாய்
3. வெளியான
அலங்காரங்கள்
- என்
தேவன்
நீர் விரும்பாதது
- 2
உள்ளத்தில்
மறைந்திருக்கும்
வாழ்வே
மெய் அலங்காரமே
- 2 - விழித்திருப்பாய்
- DR. JOSHUA NESAN
Comments
Post a Comment