மலர் போன்ற பாதங்களில் மன்னவா
மலர்
போன்ற பாதங்களில்
மன்னவா
என்
மனதை நான் தொலைத்தேன்
அலங்கார
மாளிகையாய்
உமக்கு
ஆலயமாய் நான் இருப்பேன்
- 2
1. ஓடுகின்ற
நீர்களும்
பாடுகின்ற குயில்களும்
உந்தனின்
புகழ் பாடுதே
- 2
உந்தன்
பாதம் அமர்ந்திருப்பேன்
(நான்) - (2)
உம்மோடு
எந்நாளும் என்
ஜீவாதிபதியே
- மலர்
2. கால்களுக்கு
தீபமும் பாதைக்கு
வெளிச்சமும்
நீர் தந்த திரு
வேதமே - 2
தினம் தினம்
தியானித்திடுவேன் (நான்) - 2
உயிரோடு
உயிராக நான் உம்மோடு
வாழ வேண்டும்
- மலர்
3. வாழ்வளிக்கும்
வானமே வழி கொடுக்கும்
மேகமே
வரம் ஒன்றை
நான் கேட்கின்றேன்
- 2
ஒரு போதும்
உமை மறவா (நான்)
- 2
மனதாலே
நினைவாலே
நான் நாள்தோறும்
பாட வேண்டும்
- மலர்
- E. Williams
YouTube Link
Comments
Post a Comment