மரி மரி பாலா மங்கள சீலா

மரி மரி பாலா மங்கள சீலா

மேலும் அதிக பாடல்களுக்கு

 

 

 

 

 

 

86. இராகம்: மோகனம்.                                                                                                         தாளம்: ஆதி.

 

                                                                        பரி. மத்தியாவின் திருநாள் - பிப்ருவரி 2ஆம் நாள்

 

                             “சாலேமின் இராசா சங்கையின்” - என்ற மெட்டு

 

                             கண்ணிகள்

 

1.       மரி மரி பாலா, மங்கள சீலா,

            மனதில் வாருமேன், மனதில் வாருமேன் - இன்று

            மத்தியா வின்திரு நாளினில் வந்தோம்,

            மகிழ்ந்து பாருமேன்.

 

2.         எழுபது சீடரில் இவனொரு சீடனாய்,

            எண்ணியிருந்தோம், எண்ணியிருந்தோம் - அப்போம்

            ஏற்பட்ட சீட்டினால், இந்தப் பதவிக்கு,

            இசைந்தவனானான்

 

3.         பாதகம் செய்து நற் பதவியை இழந்த,

            பாவி யூதாசின், பாவி யூதாசின் - தானம்

            மாதவர் போற்றும் இம் மத்யாவுக் கேற்பட்ட,

            மகிமை என் சொல்வோம்

 

4.         ஐம்புல ஆசையை, மாமிச இச்சையை,

            அடக்கியாண் டிடும், அடக்கியாண்டிடும் - என்று

            ஆவலுடன் சுவிசேட மறை சொல்லி,

            அறைந்து கூவினான்.

 

5.         கல்லெறி பட்டு எருசலேம் விட்டுக்

            கப்ப தோக்கியா, கப்பதோக்கியா - ஏகி

            கர்த்தனைப் போல சிலுவை யறையுண்டு,

            கண்ணை மூடினான்.

 

6.         குருவபிசேடம் செய்யத் தெரிந்திடக்,

            கோமான் கற்பனையோ, கோமான் கற்பனையோ? - இந்தக்

            குவல யத்தவர் மாதிரி பார்த்திட,

            குறித்த மா முனியோ?

 

- S. உவால்டர் கவிராயர், தென்மலை.

 

 

 

 

 

 

கிறிஸ்தவ பாடல் தொகுப்பு

 

PDF பாடல் புத்தகங்கள் பதிவிறக்கம்

Comments

Popular posts from this blog

உன்னதரே உம் மறைவில் தங்கி வாழ்கிறேன்

என் வாழ்விலே நீர் பாராட்டின

தாய் மறந்தாலும் நீர் மறப்பதில்லையே