மகிமையின் மேகங்கள் சூழுதே
மகிமையின்
மேகங்கள் சூழுதே
ராஜா
வருகை சமீபமே
அல்லேலூயா
1. வாசலே
தலைகளை உயர்த்துங்கள்
வானவர்
இயேசுவை வாழ்த்துங்கள்
விண்ணக
தூதரும் மண்ணக
தாசரும்
இணைந்திடுவார்
விரைவில்
2. வருகையின்
அடையாளம் ஏராளமே
தீர்க்கரின்
உரைகளும் நிறைவேறுதே
மன்னாதி
மன்னவர் தூயாதி
தூயவர்
கிறிஸ்து
வருகின்றார் -
ஆஹா
3. தூதரின்
எக்காளம் முழங்கிடவே
நித்திரை
அடைந்தோர்
எழுந்திடவே
மண்ணான
சரீரம் விண்ணானதாக
உன்னதர்
வருகின்றாரே -
ஆஹா
PDF
பாடல்
புத்தகங்கள்
பதிவிறக்கம்
Comments
Post a Comment