வருவாய் கருணாநிதியே புது வருடமதில் ததி
வருவாய் கருணாநிதியே புது வருடமதில் ததி மேலும் அதிக பாடல்களுக்கு 477. இராகம்: சங்கராபரணம் ஆதி தாளம் பல்லவி வருவாய்! கருணாநிதியே !-புது வருடமதில் துதி சரணங்கள் 1. வருடங்கள் வளர்ந்து வருகின்ற வாறே இருதயம் ஆவியில் இலங்கி யொரு தருவினில் [1] மாண்டுயிர்த் தெழுந்த நின் சீர் போல் வருபவந் தனிலிறத் துயர் கதியே-வாகா [2] யேகிட - வரு 2. ஆண்டிதிற் புதிய ஆண்மையு மருளும் வேண்டிய வாறே விளங்கி வளர ஆண்டவன் மந்தையில் ஆற்றிடத் தொண்டு வேண்டிய மட்டும் விரைந்தீவாய்-வேதநாயகா - வரு 3. ஆதியிற் சபைகள் ஆகியவாறே ஆதிபன் ஆவியின் அபிஷேகம் ஜோதியோடேற்று ஜொலித்திட நாளும் வேதியரோடு [3] விழைந்துழைப்ப...