15 February 2024

உயிர்த்தெழுந்தார் உயிர்த்தெழுந்தார் உன்னதர் இயேசு

உயிர்த்தெழுந்தார் உயிர்த்தெழுந்தார் காலி கல்லறை

மேலும் அதிக பாடல்களுக்கு

 

 

 

                   உயிர்த்தெழுந்தார் உயிர்த்தெழுந்தார்

                        உன்னதர் இயேசு உயிர்த்தெழுந்தார்

                        காலி கல்லறை காண வாரீர்

                        கர்த்தர் கிருபையை நித்தம் தேடி

 

1.         சாவின் பயங்கரத்தை அழித்து

            பொல்லா ஆவியின் வல்லமையை முறித்து

            ஜெயம் ஜெயம் அல்லேலூயா (2) - உயிர்த்தெழுந்தார்

 

2.         சிலுவையிலே ஜெயம் எடுத்தார்

            அந்தோ சீறிவந்த சாத்தானை மிதித்தார்

            முன் அவர் சொன்னபடி மூன்றாம் நாள் உயிர்த்தெழுந்தார் - உயிர்த்தெழுந்தார்

 

3.         மூவுலகத்தையும் அசைத்து

            அந்தோ முத்திரையிட்ட கல்லை திறந்து

            பிலாத்து அன்னா காய்பா பித்தர்களாய் நடுநடுங்க - உயிர்த்தெழுந்தார்

 

4.         என் மீட்பர் உயிரோடு இருக்க

            எனக்கென்ன குறை உலகை ஜெயிக்க

            ஆவியால் முத்திரித்தார் ஆனந்த கீதம் பாட - உயிர்த்தெழுந்தார்

 

5.         நீதியின் சூரியன் உதிக்கும்

            அந்தோ சூனிய மந்திரத்தை அழிக்கும்

            தேவர்களின் விக்கிரகம் தேடியும் காணாமல் போகும் - உயிர்த்தெழுந்தார்

 

https://www.youtube.com/watch?v=AG_DeO4hDrI

 

 

கிறிஸ்தவ பாடல் தொகுப்பு

 

PDF பாடல் புத்தகங்கள் பதிவிறக்கம்

 

No comments:

Post a Comment

ஆஸ்திகளெல்லாம் ஈடாகுமா என்

நிஜீ.கீதங்கள்:1971 To Download Txt Lyrics file   Youtube Link                      ஆஸ்திகளெல்லாம் ஈடாகுமா    ...