கல்வாரியே கல்வாரியே கண்டு மனம்

கல்வாரியே கல்வாரியே கண்டு மனம்

                   கல்வாரியே கல்வாரியே

                        கண்டு மனம் உருகலையோ (2)

                        கர்த்தர் இயேசு கதறிடும் சத்தம்

                        உன் காதில் தொனிக்கலையோ (2)

 

1.         சிவந்த மேனி உந்தன் மேனியய்யா

            சிவப்பங்கிதான் உந்தன் கோலமய்யா (2)

            சிந்துதே உந்தன் உதிரம்

            சிலிர்க்குதே எந்தன் சரீரம் (2)

 

2.         முட்களினால் உமக்கு கிரீடமய்யா

            முதுகினில் வாரினால் அடித்தாரைய்யா (2)

            உதட்டில் காரி உமிழ்ந்தானைய்யா

            முத்தமிட்டுக் காட்டிக் கொடுத்தானையா (2)

 

3.         அற்புதங்கள் செய்த கரங்களையா

            ஆணியால் கரத்தை துளைத்தானையா (2)

            அண்டி வந்தோரை அணைத்தீரையா

            அந்தரத்தில் ஜீவன் தந்தீரையா (2)

 

 

https://www.youtube.com/watch?v=Anw81nukb7w

Comments

Popular posts from this blog

உன்னதரே உம் மறைவில் தங்கி வாழ்கிறேன்

என் வாழ்விலே நீர் பாராட்டின

தாய் மறந்தாலும் நீர் மறப்பதில்லையே