இன்று இயேசு உயிர்த்தெழுந்தார்
இன்று
இயேசு உயிர்த்தெழுந்தார்
வென்று
சாவை ஜெயித்தெழுந்தார்
1. அழகுமில்லை
ரூபமும் இல்லை
அவரைக் பார்க்கும்
போது
அசட்டை,
நிந்தை, துயரம்,
பாடு, அனைத்தும்
அனுபவித்தார்
- 2
அடிபட்டு,
வதைக்கப்பட்டு,
சிலுவையில் அறையப்பட்டார்
(2)
அவரது தழும்பால்
குணமாகுமாறு
ஆக்கினை அவர்
ஏற்றார் - இன்று
2. ஆடு போல
வழி தப்பித் திரிந்த,
அனைவரை ஈடேற்ற,
ஆத்தும
நாயகர் ஐங்காயம் சுமந்து,
அலகை வென்றதனால்
- 2
ஆனந்தம்
கொண்டார்ப்பரிப்போம்,
அவனியில்
அறைகூவுவோம்
(2)
ஆண்டவர்
சிறந்தார், அவரையே
அளித்தார், அவனியில் எங்குமுண்டோ?
https://www.youtube.com/watch?v=zxbIOWSAP4M
Comments
Post a Comment