பாவமில்லாத ஆட்டுக்குட்டி பாரச்சிலுவையை

பாவமில்லாத ஆட்டுக்குட்டி பாரச்சிலுவையை

மேலும் அதிக பாடல்களுக்கு

 

 

 

ராகம்: சிந்து பைரவி                               தாளம்: ஆதி

 

பல்லவி

 

                   பாவமில்லாத ஆட்டுக்குட்டி

                        பாரச்சிலுவையை தோளில் ஏற்றி

                        பாதமிடறி பாதைத் தவறி

                        பதறிப் பயணம் போவதெங்கே - 2

 

சரணங்கள்

 

1.         பாவம் செய்தோர்கள் இங்கே உண்டு

            பரமனும் பாதகர் நடுவே நின்று

            பால் மறவாத பாலனைப் போல

            வாய் திறவாமல் போனதென்ன - பாவமில்லாத

 

2.         குற்றமிலலாத இரத்தம் ஆறாய்

            குருசினில் ஓடுவதேன் பாராய்

            உருகலையோ உன் மனமே

            உணர்வில்லையோ உன் கல்மனமே - பாவமில்லாத

 

3.         சங்கத் தலைவர்கள் அடியாணி போல்

            சாத்தான் சர்ப்பமாய் கடித்தான் காலை

            சாத்தானின் தலை மிதித்து

            சகலரின் சாபம் நீக்கினாரே - பாவமில்லாத

 

4.         மரத்தில் தொங்கிய அனைவருமே

            சாபமானார்கள் என்றது வேதம் 

            கிருஸ்துனக்காய் சாபமாகி-நியாய

            பிரமான சாபத்தை நீக்கினாரே - பாவமில்லாத

 

5.         சித்திரம் போல சிலுவையிலே

            இரட்சகர் இயேசுவை அறைந்தனரே

            உருகலையொ உன் மனமே

            உணர்வில்லையோ உன் கல்மனமே

            கல்மனமே... கல்மனமே... உன் மனம் உருகலையே

 

 

 

 

கிறிஸ்தவ பாடல் தொகுப்பு

 

PDF பாடல் புத்தகங்கள் பதிவிறக்கம்

Comments

Popular posts from this blog

தாய் மறந்தாலும் நீர் மறப்பதில்லையே

கிறிஸ்தவ கீர்த்தனைகள்

என்னக் கொடுப்பேன் இயேசுவுக்கு