14 February 2024

என் இயேசு சென்ற பாதையில்

என் இயேசு சென்ற பாதையில்

மேலும் அதிக பாடல்களுக்கு

 

 

 

1.       என் இயேசு சென்ற பாதையில்

            அவர் காட்டும் மாதிரியில்

            அவர் செய்யும் பிதாவின் சித்தம்

            அல்லேலுயா நானும் செய்வேன்

            அல்லேலுயா நானும் செல்லுவேன்

 

                             அனுபல்லவி

                        ஜெயக் கிறிஸ்து முன் செல்கிறார்

                        எனக்காக யாவும் செய்யவே

                        முசுக் கட்டை செடியின் தொனி

                        ஜெயம் ஜெயம் என்று கூறுது

 

                             சரணங்கள்

2.         துன்பங்கள் யாவும் நீக்குவேன்

            தோளின் மேல் தூக்கி சுமப்பேன்

            என்ற வாக்கு மாறிடாதவர்

                        அல்லேலுயா நம்பி செல்லுவேன்

                        அல்லேலுயா நானும் செல்லுவேன் - ஜெயக்

 

3.         செங்கடலண்டை நிற்கிறேன்

            சீறி வரும் பிசாசைக் காண்கிறேன்

            முன்னே மோசே கோலிருப்பதால்

                        மோசமின்றி நானும் செல்லுவேன்

                        நாசமாகும் பிசாசைக் காணுவேன் - ஜெயக்

 

4.         கானானின் கரை காணுது

            காதலன் தொனி கேட்குது

            காலம் இனி இல்லை ஆதலால்

                        களிப்பாக ஓடி சேருவேன்

                        கர்த்தர் அன்பை எண்ணிப் பாடுவேன் - ஜெயக்

 

 

 

கிறிஸ்தவ பாடல் தொகுப்பு

 

PDF பாடல் புத்தகங்கள் பதிவிறக்கம்

No comments:

Post a Comment

ஆஸ்திகளெல்லாம் ஈடாகுமா என்

நிஜீ.கீதங்கள்:1971 To Download Txt Lyrics file   Youtube Link                      ஆஸ்திகளெல்லாம் ஈடாகுமா    ...