16 February 2024

அல்லேலூயா இயேசு உயிர்த்தெழுந்தார்

பாடல்

To Download Txt Lyrics file

 

Youtube Link

 

                   அல்லேலூயா இயேசு உயிர்த்தெழுந்தார்

                        ஆரோனின் கோலென தளிர்த்தெழுந்தார் - 2

                        மகிமையின் சாயலை அணிந்து அவர் (2)

                        மரணத்தை மரணத்தால் வென்றெழுந்தார் (2)

 

1.         ஆதாமின் பாவத்தைப் போக்கிவிட்டார்

            ஏதேனின் சாபத்தை நீக்கிவிட்டார்

            இயேசுபிரான் இந்த காசினிலே (2)

            என்னையும் வாழ்விக்க உயிர்த்தெழுந்தார் (2)

 

2.         மரணமே உந்தன் கூர் எங்கே

            பாதாளமே உன் ஜெயம் எங்கே

            மரித்தாலும் என்றும் நாம் பிழைத்திருக்க (2)

            உயிர்த்தாரே உலகினில் உன்னதனே (2)

 

3.         வெற்றியுடன் வேந்தன் உயிர்த்தெழுந்தார்

            எத்திசையும் இதை முழங்கிடுவோம்

            மண்ணுயிர்க்காய் ஈந்தார் தம் உயிரை (2)

            ஆளும் ராஜாவாய் அவனிவர (2)

 

 

 

No comments:

Post a Comment

இந்தக் கடைசி காலத்திலே எக்காளம் தொனிக்கையில்

கீ.கீ:683 Youtube Link     1.       இந்தக் கடைசி காலத்திலே எக்காளம் தொனிக்கையில்             இயேசு விண்ணகத்தில்...