16 February 2024

என் இயேசு உயிர்த்தெழுந்தார்

என் இயேசு உயிர்த்தெழுந்தார்

மேலும் அதிக பாடல்களுக்கு

 

 

 

                   என் இயேசு உயிர்த்தெழுந்தார்

                        சாத்தானை ஜெயித்தெழுந்தார்

                        என் பாவம் சுமந்து

                        என்னை மீட்டவரை

                        எந்நாளும் நான் துதிப்பேன்

 

1.         வானமும் பூமியும் யாவையும் படைத்தவர்

            வல்இயேசு நாதனாய் மண்ணிலே பிறந்தவர்

            அலகைதனை வென்று உலகத்தை இரட்சிக்க

            அருள்வடிவாய் இன்று உயிர்த்தெழுந்தாரே - என் இயேசு

 

2.         பாவத்தை சுமந்து பாடுகள் அடைந்து

            பாவியாய் சிலுவையில் பலியானார் எனக்காய்

            மரணத்தை வென்று மாபெரும் தேவனும்

            மகிமையாய் உலகில் உயிர்த்தெழுந்தாரே - என் இயேசு

 

3.         குருசினில் தொங்கியே குருதியும் வடித்த

            குருஇயேசு சுவாமி நமக்காக மரித்த

            பரிசுத்த பாதையும் பரலோக வாழ்வையும்

            அருள்செய்ய எழுந்தார் அகமகிழ்ந்திடுவோம் - என் இயேசு

 

 

 

கிறிஸ்தவ பாடல் தொகுப்பு

 

PDF பாடல் புத்தகங்கள் பதிவிறக்கம்

No comments:

Post a Comment

அவர் நாமத்தில் இயேசு நாமத்தில்

பாடல் To Download Txt Lyrics file     Youtube Link               அவர் நாமத்தில் இயேசு நாமத்தில்          ...