12 February 2024

எழுந்திடு நீ புறப்படு இருக்கும்

எழுந்திடு நீ புறப்படு இருக்கும்

மேலும் அதிக பாடல்களுக்கு

 

 

 

                   எழுந்திடு, நீ புறப்படு

                        இருக்கும் பலத்தோடே நீ சென்றிடு

                        கலங்காதே, தயங்காதே

                        எதிரி படையினை நீ வென்றிடு

 

1.         அனுப்பும் கர்த்தர் நான் அல்லவா

            உன்னோடே கூட நானிருக்கிறேன்

            அதிசய தேவன் நான் அல்லவோ

            எதிரிகளை நீ முறியடிப்பாய்

 

2.         ஞானியின் அறிவை அவமாக்க

            அற்பனாம் உன்னை நான் தெரிந்தெடுத்தேன்

            பலமுள்ள யாவையும் வெட்கப்படுத்த

            பலவீனன் உன்னையே நான் அழைத்தேன்

 

3.         பெலவானாம் கோலியாத்தை முறியடிக்க

            சிறியவன் உன்னையே அனுப்புகிறேன்

            விசுவாச அறிக்கை நீ செய்திடு

            ஒரே கல்லாலே எதிரியை முறியடித்திடு

 

4.         அக்கினி வைத்தேன் உனக்குள்ளே

            எதிரியை நீ முறியடிப்பாய்

            ஒரே மனுஷனை அழிப்பதுபோல

            பகைவரை நீ அழித்திடுவாய்.

 

- BRO. JOHN SAMRAJ

 

https://www.youtube.com/watch?v=OuncTkR-v_I

 

 

கிறிஸ்தவ பாடல் தொகுப்பு

 

PDF பாடல் புத்தகங்கள் பதிவிறக்கம்

 

No comments:

Post a Comment

அவர் நாமத்தில் இயேசு நாமத்தில்

பாடல் To Download Txt Lyrics file     Youtube Link               அவர் நாமத்தில் இயேசு நாமத்தில்          ...