கல்வாரி என்னும் தோட்டத்திலே
கல்வாரி
என்னும் தோட்டத்திலே
எம்
கர்த்தர் தொங்கும்
மரத்தினிலே
ஏழு பூக்கள்
பூத்ததைய்யா
அது ஜீவ பூக்கள்
ஆனதைய்யா
(2)
1. ஆணிகள்
அடித்து வதைத்தவர்க்கு
- உம்
மேனியில்
வேதனை கொடுத்தவர்க்கு
- 2
பிதாவே
இவர்களை மன்னியும்
என்று (2)
முதலாம்
மலர்ந்த மன்னிப்பு
- கல்வாரி
2. குற்றம்
புரிந்த ஒரு கள்ளனுக்கு
அவன்
சத்தம்
அறிந்த அன்பு மனம்
உமக்கு - 2
இன்று பரதேசில் இருப்பாய்
என்று (2)
இரக்கத்தால்
மலர்ந்த இரட்சிப்பு
(சிலுவையில்) - கல்வாரி
3. ஈன்றெடுத்த
அன்னை துடிக்க
கண்டு உம்
இதயத்திலே
பாச உணர்வு கொண்டு
- 2
ஸ்திரியே
அதோ உன் மகனென்று
(2)
பாசத்தால்
மலர்ந்த பராமரிப்பு
(தாய்) - கல்வாரி
4. கைவிட்ட
பட்டோரை காக்க
வந்தீர் மாந்தர்
கண்ணீர்
யாவையும் துடைக்க
வந்தீர் - 2
என் தேவனே
ஏன் என்னை கைவிட்டீர்
என்று (2)
தனிமையில்
மலர்ந்த தவிப்பு
(சிலுவையில்) - கல்வாரி
5. ஜீவ
தண்ணீர் வரும்
கன்மலையே
மாந்தர்
பாவத்தை
போக்கிடும் உம்
நிலையே - 2
தாகமாய்
இருக்கிறேன் என்றுரைத்து
(2)
ஆத்ம தாகத்தால்
மலர்ந்த களைப்பு
(சிலுவையில்) - கல்வாரி
6. தொடர்ந்தது
பாவம் உலகத்தினிலே
இரத்தம்
வடிந்தது இரட்சிக்க
சிலுவையிலே
- 2
முடிந்தது
எல்லாம் என்றுரைத்து
(2)
முழுமையாய்
மலர்ந்த பூரிப்பு
(சிலுவையில்) - கல்வாரி
7. பாவியை
மீட்க வந்தவரே
தூய
தேவனின்
ஆவியை தந்தவரே
- 2
உம் கரத்தினில்
என் ஆவியை தந்துவிட்டேன்
என்று (2)
உன்னதமாய்
மலர்ந்த ஒப்புவிப்பு
- கல்வாரி
Comments
Post a Comment